ரீ எண்ட்ரி கொடுக்கும் சிந்து ஷ்யாம்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே. இதன் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நவீன் மற்றும் ஹிமா பிந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் காதல், ஊடல், கூடல் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடரில் புதிதாக வில்லி ஒருவர் வருகிறார். ராஜேஸ்வரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிந்து ஷ்யாம் நடிக்கவுள்ளார். சிந்து ஷ்யாம் முன்னதாக பகல் நிலவு, தெய்வ மகள் சீரியலில் நடித்திருந்தார். சில வருட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் சீரியலுக்கு திரும்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.