வெளியானது அரபிக் குத்து போஸ்டர்..!வித்யாசமான கெட்டப்பில் விஜய்..!

நடிகர்
விஜய்
நடிப்பில்
நெல்சன்
இயக்கி முடித்துள்ள திரைப்படம்
பீஸ்ட்
.
பூஜா ஹெக்டே
நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும்
அனிருத்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். பரபரப்பாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் நாளை வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் ப்ரோமோவின் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதெல்லாம் நடந்ததற்கு காரணம் யார் தெரியுமா ? : தனுஷ்

அந்த ப்ரோமோவில் நெல்சன், அனிருத் மற்றும் அப்பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருந்தனர். கலகலப்பான அந்த ப்ரோமோவில் விஜய்யும் தொலைபேசியின் மூலம் உரையாடினார். இதன் காரணமாக இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாகிவுள்ளது. அரபிக் குத்து பாடலுக்கு ரொமான்டிக் நடனமாடியுள்ள பூஜா ஹெக்டே மற்றும் விஜயின் போஸ்டர் தற்போது வெளியாகிவுள்ளது.

கலக்கலாக இருக்கும் அந்த போஸ்டர் தற்போது செம வைரலாகிவருகிறது.

அதிரடி கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது பலரின் கருத்து. நெல்சன் எப்போதும் தன் படங்களில் காமெடியை முன்னிறுத்தியே காட்சிகளை நகர்ந்துவார்.விஜய்க்கும் காமெடி கைவந்த கலை என்பதால் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரின் மனசையும் கவரும் மருத – மனம் திறந்த ராதிகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.