மீண்டும் அரங்கேறிய இலங்கையருக்கு நடந்தது போன்ற ஒரு பயங்கரம்! கொல்லப்பட்டவரின் புகைப்படம் வெளியானது


பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற அதே பாணியில் கும்பலால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ள ஜுங்லா டீரா கிராமத்தை சேர்ந்த பலரும் கடந்த சனிக்கிழமை அன்று தொழுகை முடிந்து வந்த நிலையில் நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத்தினார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து துவைத்தனர், இதோடு மரத்தில் கட்டி வைத்தும் தாக்கினர்.
பின்னர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்நிலையில் கொல்லப்பட்ட நபரின் பெயர் முஸ்தாக் ராஜ்புட் எனவும் அவரின் தந்தை பெயர் பஷீர் அகமது எனவும் தெரியவந்துள்ளது, அவர் மனநலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், முஸ்தாக்கை கும்பல் தாக்க தொடங்கிய உடனே அங்கு வந்த பொலிசார் அவரை கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர்.
ஆனால் பொலிசாரிடம் இருந்து முஸ்தக்கை இழுத்து சென்ற கும்பல் அவரை அடித்து கொன்றது என கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் இலங்கையரான Priyantha Diyawadana (40) என்பவர் ஒரு கும்பலால் எரித்து கொல்லப்பட்டார்.
தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டரை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டதற்காக அவர் கொல்லப்பட்டார்.

இதே பாணியில் தற்போது முஸ்தாக்கும் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரையில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.