வந்தாச்சு எல்ஐசி ஐபிஓ.. டிசிஎஸ், ரிலையன்ஸ்-க்கு புதிய பிரச்சனை..!

பல கோடி ரீடைல் முதலீட்டாளர்களும், மத்திய நிதியமைச்சகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடுவதற்காக IRDAI அமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் முடிந்த கையோடு செபி-யிட் DRHP அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் ஐபிஓ மிகவும் ஸ்பெஷல்.

சீனாவின் 54 ஆப்களுக்கு தடை.. பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் காரணம் என பரபர குற்றச்சாட்டு..!

லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன்

லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன்

இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் சுமார் 66 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் 1956ஆம் ஆண்டுச் சுமார் 245 இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது.

60 ஆண்டுகள்

60 ஆண்டுகள்

இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகள் பல கோடி குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும் எல்ஐசி நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 2000 அலுவலகங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

286 மில்லியன் பாலிசிகள் விற்பனை
 

286 மில்லியன் பாலிசிகள் விற்பனை

எல்ஜசி நிறுவனத்தில் இன்சூரன்ஸ், ஹவுசிங் பைனான்ஸ் என்ற இரு வர்த்தகப் பிரிவுகள் இருக்கிறது. ஏற்கனவே எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் நிலையில் தற்போது இன்சூரன்ஸ் பிரிவு ஐபிஓ-வுக்கு வருகிறது. இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் சுமார் 286 மில்லியன் பாலிசிகளை விற்பனை செய்து சுமார் 66 சதவீத வர்த்தகச் சந்தையைப் பிடித்துள்ளது.

ரூ.39.49 லட்சம் கோடி முதலீடு

ரூ.39.49 லட்சம் கோடி முதலீடு

இதுமட்டும் அல்லாமல் 39.49 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளராக உள்ளது. இதில் 9.78 லட்சம் கோடி ரூபாய் தொகையைப் பங்குச்சந்தையில் மட்டும் முதலீடு செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் நிஃப்டி 200 மற்றும் பிஎஸ்சி 200 குறியீட்டில் இருக்கும் பெரும்பாலான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

DRHP அறிக்கை

DRHP அறிக்கை

எல்ஐசி நிறுவனம் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் சமர்ப்பித்துள்ள DRHP அறிக்கையில் 10 ரூபாய் முக மதிப்புக் கொண்ட சுமார் 316,249,885 பங்குகளை 5.39 லட்சம் கோடி ரூபாய் எம்மெட்டெட் மதிப்புடன் பட்டியலிட உள்ளது.

65000 கோடி ரூபாய் ஐபிஓ

65000 கோடி ரூபாய் ஐபிஓ

இந்த எல்ஐசி ஐபிஓ மூலம் மத்திய அரசு 62,000 முதல் 65000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட உள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட divestment target அளவான 78,000 கோடி ரூபாய் அளவை அடைய முடியும். நடப்பு நிதியாண்டில் 12,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ், டிசிஎஸ்

ரிலையன்ஸ், டிசிஎஸ்

எல்ஐசி நிறுவனத்தின் இந்த 65,000 கோடி ரூபாய் ஐபிஓ இதற்கு முன்பு மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்ட பேடிஎம் நிறுவனத்தின் 18,300 கோடி ரூபாய் ஐபிஓ-வை விடவும் பல மடங்கு பெரியது. மேலும் ஐபிஓ-வுக்குப் பின்பு எல்ஐசி நிறுவனம் சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மதிப்பீட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக மதிப்புடைய நிறுவனமாகக் கருதப்படும் ரிலையன்ஸ், டிசிஎஸ் நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு முதல் இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC IPO: TCS, Reliance industries may piped by LIC after Listing, valuation may cross RS.12.5 trillion

LIC IPO: TCS, Reliance industries may piped by LIC after Listing, valuation may cross RS.12.5 trillion வந்தாச்சு எல்ஐசி ஐபிஓ.. டிசிஎஸ், ரிலையன்ஸ்-ஐ ஓரம்கட்டும் ரூ.65,000 கோடி திட்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.