ஸ்டாலின் வீட்டு முன்பு திடீர் போராட்டம்: பா.ஜ.க மாணவர் பிரிவினர் கைது

ABVP members arrested for protest in front of CM house for thanjai girl suicide issue: தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதிக்கேட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு போராடிய பாஜகவின் மாணவர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும், கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய சொன்னதுதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.

பள்ளியின் வார்டன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது.

இந்தநிலையில், மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.