அவருக்கு ஏங்க நன்றி சொல்லல? கோப்ரா பட இயக்குநரை விளாசிய பிரபல இயக்குநர்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய
அஜய் ஞானமுத்து
, தற்போது ’
கோப்ரா
’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடிகை சதா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடைபெற்றது.

தோளில் கை போட்டிருக்கும் ரஜினிகாந்த்… பழைய போட்டோவை பகிர்ந்து பாராட்டிய இசைஞானி!

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

என்ன சார் கோவமா இருக்கீங்களா? செல்வராகவன் ஷேர் செய்த போட்டோ… பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

இதில் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு அஜய் ஞானமுத்து நன்றி கூறவில்லை, இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் தயாரிப்பாளரக்கு நன்றி தெரிவிக்கவில்லை என கேட்டனர். இந்நிலையில் அஜய் ஞானமுத்துவின் பதிவை பார்த்த அம்மா கிரியேஷன்ஸ்
டி சிவா
, அஜய் ஞானமுத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

என் மகள்கள் வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்தாலே போதும்… ஏன் அப்படி கூறினார் ரஜினி?

பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல… மூக்கும் முழியுமாய் இருக்கும் டாக்டர் பட நடிகை!

தயாரிப்பாள டி சிவாவின் இந்த பதிவை பார்த்த இயக்குநர் அஜய் ஞானமுத்து அவருக்கு பதில் அளித்துள்ளார். அதில் மரியாதைக்குரிய சார்! நான் எப்போது, எங்கு கேட்டாலும், கோப்ரா படத்தின் பட்ஜெட் அதிகரிக்க நான் காரணம் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்!! வதந்திகளை விட ஆதாரங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் பேசும்!! மற்றும் “குழு” என்று குறிப்பிட்டதன் மூலம் அது என் தயாரிப்பாளரையும் உள்ளடக்கியது. நான் எப்போதும் அவரை தாழ்த்தியதில்லை! சியர்ஸ் சார் என பதிவிட்டுள்ளார்.

காதலர் தினத்தில் நடுரோட்டில் மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’ வேம்புலி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.