ரஜினி ரசிகர்களை திடீரென குஷிப்படுத்திய இளையராஜா: அடுத்த படத்தை தயாரிக்கிறாரா?

Isaignani Ilayaraja Share Photo With Rajinikanth : 1976-ம் ஆண்டு தமிழில் சிவக்குமார் நடிப்பில் வெளியான அண்ணக்கிளி படத்தின் மூலம் இசையமைபபாளாக அறிமுகமானவர் இளையராஜா. அப்போது யாருக்கும் தெரியாது இவர் தமிழ் திரையுலகில் தனது இசையால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார் என்று. தமிழ் சினிமாவில் தற்போது பல இசையமைபபாளர்கள் வந்துவிட்டாலும், கூட என்றும் இளையராஜா என்பது இன்றளவும் மாறாமல் அப்படியேதான் உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்றாற்போல் அவரின் இசையும் மாறிக்கொண்டே வருகிறது. அரைநூற்றாண்டு காலம் தமிழக ரசிகர்களை தனது இசையால கட்டிப்போட்டள்ள இளையராஜா, அன்பு சோகம், துரோகம், நட்பு, என பல்வேறு உணர்ச்சிகளை தனது இசையால் உலகுக்கு உணர்த்தியவர். பாராபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகர்களுக்கும் சிற்நத பாடல்களை வழங்கியுள்ளார்.

90-க்கு முன்பு தமிழ் சினிமாவில், பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசை. இவர் இசையமைத்தால் அந்த படம் வெற்றி என்று இப்போது பல இயக்குநர்கள் சொல்வதுண்டு. உலகளவில் அங்கிகாரம் பெற்றுள்ள இளையராஜாவின் இசைக்கு இன்றைய தலைமுறையினரும் அடிமை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கிய இன்றைய புதுமுக நடிகர்களை வரை அனைவரின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதேபோல் அனைத்து நடிகர்ளுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில், ரஜினி மற்றும் கமல் உடனான இளையராஜாவின் பயணத்தை சொல்லாம். 16 வயதினிலே தொடங்கி ரஜினி கமல் இருவரும் நடித்த பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா மலரும் நினைவுகள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தான் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

என்றும் என்றென்றும் என்று பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைராக பரவி வருகிறது. அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கியுடன் இணைய உள்ளதாகவும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் சமீபத்தில் வெளியான அறிவிப்பில், ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில், இயக்குநர் நெல்சனுடன் இணைய உள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இளையராஜா ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ரஜினி அடுத்த படத்தில் இளையராஜாவுடன் இணைய உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் இந்த புகைப்படத்தால் குஷியான ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.