"லன்ச்சுக்கு முழு டைனோசர்.. அப்படியே முழுங்கு".. அதிர வைத்த அந்தக் கால முதலை!

ஆஸ்திரேலியாவில் தொல்லியல் துறையினர் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தனர். அதாவது டைனோசரை கடையிகா சாப்பிட்ட ஒரு
முதலை
குறித்த கண்டுபிடிப்புதான் இது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் விநோதமான கண்டுபிடிப்பு இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட முதலையின் படிமத்தில் வித்தியாசமான தகவல் அடங்கியுள்ளது. அதாவது டைனோசரை சாப்பிட்டதுமே அந்த முதலை இறந்து போய் விட்டதாம்.

முதலை –
டைனோசர்
இடையிலான தொடர்பு குறித்த முதல் வரலாற்று சாட்சி இதுதான் என்றும் ஆஸ்திரேலிய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

95 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்லியல் பிரதேசமான வடக்கு மேற்கு வின்டன் மலைப் பகுதி அருகே இந்த எலும்புக் கூடு கிடைத்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட முதலை, Confractosuchus sauroktonos என்ற இனத்தைச் சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த முதலையானது சாகப் போவதற்கு முன்பு ஒரு குட்டி டைனோசரை முழுங்கியுள்ளது. அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் முதலை இறந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. முதலை சாப்பிட்டது, ஆர்னித்தோபோட் வகை டைனோசர் ஆகும். neutron, synchrotron X-ray மற்றும் micro-CT தொழில்நுட்பங்கள் மூலம் இந்த முதலை – டைனோசர் மோதலுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.

என்ன பரமா பயந்துட்டியா??.. திடீரென பாசறைக்குத் திரும்பும் ரஷ்ய படைகள்!

டைனோசர் முழுமையாக ஜீரணம் ஆகாத நிலையிலேயே இந்த முதலை இறந்துள்ளது. மிகவும் சிறிய சைஸ் டைனோசர் அது, அதாவது 1.7 கிலோ எடையில்தான் அது இருந்துள்ளது. இதனால்தான் முதலையால் எளிதாக முழுங்க முடிந்துள்ளது. ஆனால் டைனோசரை முழுங்கியதும் முதலை செத்துப் போய் விட்டது. டைனோசரின் எலும்புகள் சிக்கி முதலை இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டைனோசர்கள்தான் பிற விலங்குகளைக் கொல்லும் என்று நாம் இதுவரை அறிந்திருக்கிறோம். ஆனால் டைனோசரையே சாப்பிடும் முதலைகளும் இருந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது வியப்பை அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.