Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டாலும், புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை.

இந்த சூழலில், சியோமியின் கீழ் இயங்கும் போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் (MediaTek Dimensity 810), இரட்டை லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் இந்த
போக்கோ எம்4 5ஜி
ஸ்மார்ட்போன் களம்கண்டுள்ளது.

Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் (poco m4 pro 5g features)

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ DCI-P3 எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதள அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

போக்கோ எம்4 5ஜி செயல்திறனை பொருத்தவரை, 6nm நானோமீட்டரில் கட்டமைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலி ஜி57 கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. UFS2.2 மெமரி ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ஆகிய ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் Turbo RAM எனும் மேம்பட்ட வசதியும் உள்ளது. இதன் மூலம், பயன்பாடு இல்லாமல் இருக்கும் உள்ளடக்க மெமரியானது, ரேம் மெமரியின் வேலைகளை செய்யும்.

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா (poco m4 pro 5g camera)

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டுயல் கேமரா அமைப்புக் கொண்டுள்ளது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமராவும், கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகள், செல்பி மற்றும் முகத்தை கொண்டு போனை திறக்க 16 மெகாபிக்சல் கேமராவை முன்பக்கத்தில் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்கும் 33W பாஸ்ட் சார்ஜர் போனின் கூடவே வழங்கப்படுகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், வைஃபை, ப்ளூடூத் 5.1, இன்பிராரெட் சென்சார், டைப்-சி, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் தன் வசம் கொண்டுள்ளது. இதில் கேமர்களுக்காக X-Shockers வைப்ரேஷன் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

Poco X4 5G: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் பட்ஜெட் போக்கோ போன்!

போக்கோ எம்4 5ஜி விலை (poco m4 pro 5g price in india)

பவர் பிளாக், கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகவும், டாப் வேரியண்டான 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.18,999 ஆகவும் விற்பனை கொண்டு வரப்பட்டுள்ளது.

2022 இல் ஆண்ட்ராய்டு போனுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?

போக்கோ எம்4 5ஜி விவரக்குறிப்புகள்
(poco m4 pro 5g specifications)

பெயர்போக்கோ எம்4 ப்ரோ 5ஜிஅளவு163.56 x 75.78 x 8.75 மில்லிமீட்டர்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 11 (எம்ஐயுஐ 12.5 போக்கோ)சிப்செட்மீடியாடெக் டைமென்சிட்டி 810, ஏ.ஆர்.எம் மாலி ஜி57 கிராபிக்ஸ் எஞ்சின்திரை6.6″ அங்குல முழுஅளவு எச்டி+ டாட் டிசிஐ-பி3 எல்சிடி திரை, 90Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட், 240Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட், சன்லைட் டிஸ்ப்ளேதெளிவுதிறன்2400*1080 பிக்சல்கள்பின்புற கேமரா50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (f/1.8) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் (f/2.2)முன்புற கேமரா16 மெகாபிக்சல் செல்பி (f/2.45)ஸ்லாட்இரண்டு 5ஜி நானே சிம் (7 Bands) + 1 எஸ்டி கார்டு (1டிபி வரை)ரேம்4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி (LPDDR4X)மெமரி64ஜிபி, 128ஜிபி (UFS 2.2)ஆதரவுவைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப்இடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSபேட்டரி5000mAh / 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுநிறங்கள்கூல் ப்ளூ, பவர் பிளாக், போக்கோ யெல்லோஎடை195 கிராம்விலை4ஜிபி + 64ஜிபி – ரூ.14,999 | 6ஜிபி + 128ஜிபி – ரூ.16,999 | 8ஜிபி + 128ஜிபி – ரூ.18,999

போனுல பேட்டரி பிரச்னையா… இத அவசியம் படிங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.