அடிச்சாம் பாருடா அப்பாய்ன்மெண்ட் ஆடரு…! பான் இந்திய ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா…!

நடிகை
மாளவிகா
மோகனுக்கு ஜாக்பாட் அடித்து இருக்கு என்றே சொல்லலாம். பான் இந்திய ஹீரோவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல இந்தி, படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன்.

நடிகை மாளவிகா மோகன் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.

அவர் எனக்கு வழிகாட்டி.. தனுஷ் குறித்து பெருமையாக பேசிய மால்மோ..!

பேட்ட படத்திற்கு பின்னர் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

மாளவிகா மோகனன் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி உள்ள மாறன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பான் இந்திய ஹீரோவான பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்துள்ள
பிரபாஸ்
,
சலார்
படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, அவர் நடிக்கும் படத்தை
மாருதி
இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஆர் ஆர் ஆர் படத்தைத் தயாரித்த
டிவிவி தனய்யா
தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.