பாஜக எம்பி யின் ஆபாச பதிவு : காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்

நொய்டா

டிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி பங்குரி பதக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ரவி கிஷன் பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.   அதே மாநிலத்தைச் சேர்ந்த பங்குரி பதக் காங்கிரஸ் பெண் நிர்வாகி மற்றும் நட்சத்திர பேச்சாளர் ஆவார்.   இவர் நொய்டா காவல் நிலையத்தில் ரவி கிஷன் மீது அளித்த புகார் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பங்குரி பதக் தனது புகாரில், 

“சமீபத்தில் நொய்டாவில் நடந்த வாக்குப்பதிவிற்கு அடுத்த நாள், எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான டிவிட்டர் கணக்குகளில் இருந்து ஆபாசமான கருத்துக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இவ்வாறு எனக்கு எதிராக இணையத்தில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அதிகரித்ததால், அந்த கணக்குகளை நீக்கினேன்.

இவற்றில் பாஜக எம்பி ரவி  கிஷன் பெயரில் உள்ள கணக்கில் இருந்தும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்கள் வெளியானது.   தவிர இந்த பதிவை நீக்க வேண்டுமானால் ₹ 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மற்றொரு பதிவில் கோரப்பட்டது.  

இதுபோல்  பாஜக ‘ஐடி செல்’ நடத்தும் ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் பாலியல் ரீதியாகத்  துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். ஆகவே எனக்கு எதிராகப் பரப்பப்படும் ஆபாச பதிவுகளை நீக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

என்று கூறப்பட்டுள்ளது.

காவல்துறை துணை ஆணையர் விருந்தா சுக்லா இது குறித்து விசாரணையை சைபர் கிரைம் காவல்துறையினர் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.