பாலிவுட்டில் டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்திய பாடகர் பப்பி லஹிரி மறைந்தார்!

பாலிவுட்டில் 1980, 90 களில் டிஸ்கோ நடனத்தை அறிமுகம் செய்து பிரபலமானவர் பப்பி லஹரி. சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய பப்பி லஹிரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த திங்கள் கிழமை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய் கிழமை மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனே டாக்டர் ஒருவரை உடனே வீட்டிற்கு அழைத்து குடும்பத்தினர் சிகிச்சை கொடுத்தனர். ஆனால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் பப்பி லஹரி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

பப்பி லஹிரி

நள்ளிரவில் உறக்கத்தில் பப்பி லஹிரி மரணமடைந்ததாக டாக்டர் தீபக் தெரிவித்தார். அவருக்கு வயது 69. பப்பி லஹிரி என்றாலே உடல் முழுவதும் தங்கச்செயின் அணிந்து கொண்டு கருப்பு கிளாஸ் கண்ணாடி அணிந்து கொண்டு இருப்பது அவரது அடையாளமாக கருதப்படுகிறது. நாட்டில் டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்தியவராக அனைவராலும் அறியப்பட்ட பப்பி லஹிரி 1970, 80 களில் பாலிவுட்டில் அதிமான பாடல்களை பாடியிருக்கிறார். கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு பாகி 3 படத்தில் பாடியிருப்பார். சொந்தமாகவும் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாலிவுட் மட்டுமல்லாது பெங்காலி படங்களிலும் அதிக அளவில் இசையமைத்து பாடியிருக்கும் பப்பி லஹிரியின் உண்மையான பெயர் அலோகேஷ் ஆகும். பப்பி லஹிரி பாஜகவில் சேர்ந்து கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.