மதுரை: சிட்கோ தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து-பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பைப்கள் சேதம்

மதுரை வரிச்சியூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதமடைந்தன. 
மதுரை மாவட்டம் வரிச்சியூரை அடுத்துள்ள உறங்கான்பட்டி சிட்கோ தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் துவங்கி ஆலை முழுவதும் பரவியது.
image
image
பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயின் வேகம் அதிகளவில் இருந்ததால் வீரர்கள் உள்ளே நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டு, தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தொடர்ந்து தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
image
image
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப் பொருட்கள் மற்றும் பைப் தயாரிக்கும் எந்திரங்கள் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கருப்பாயூரணி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ தொடர்ந்து எரிந்து வருவதால் தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.