வலிமை… முதல் நாள்.. முதல் காட்சி.. எத்தனை மணிக்கு தெரியுமா?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம்
வலிமை
. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இதயம் முரளி கலை கல்லூரியான பிக்பாஸ் வீடு.. 80ஸ் நடிகர்களான ஹவுஸ்மேட்ஸ்!

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போனற் காராணங்களால் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒவ்வொன்னும் ஒரு ரகம்… நடிகை டாப்ஸியின் கலக்கல் போட்டோஸ்!

இந்நிலையில் வரும் 24ஆம் தேதி வலிமை படம் ரலீஸ் ஆகவுள்ளது. இந்த நேரத்தில் தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்திருப்பது படக்குழு கூடுதல் எனர்ஜியை அளித்துள்ளது.

எனக்கு அந்த ரோல் நடிக்கத்தான் ஆசை… பல நாட்களுக்கு பிறகு மனம் திறந்த சார்பட்டா பரம்பரை நடிகர்!

இந்நிலையில் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தியேட்டர்களில் ஸ்க்ரீனிங் செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு பல திரையரங்குகளில் இதற்கான முன்பதிவு இப்போதே தொடங்கிவிட்டது.

முத்தழகா இது… பளபளன்னு இருக்காங்களே… பிரியாமணியின் கலக்கல் போட்டோஸ்!

இதனிடையே முதல் 4 நாளைக்கு ஸ்பெஷல் ஸ்க்ரினீங் படக்குழு அனுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. வலிமை படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேடையில் அரசியல் பேசிய இயக்குனர் அமீர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.