விஜய்யை போல தத்ரூப தோற்றம் – கேரள நபரை அழைத்து வந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம்!

நடிகர் விஜய்யை போல தத்ரூப தோற்றம் கொண்ட கேரள நபரை ஈடுபடுத்தி விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 88வது வார்டில் நாகேஸ்வரி என்பவர் போட்டியிடுகிறார். இதில், வாக்கு சேகரிக்க நடிகர் விஜய்யை போல தத்ரூப தோற்றம் கொண்ட கேரளாவை சேர்ந்த இளைஞரை அழைத்துவரப்பட்டார். அப்போது அவரை 88 வது வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபடுத்தினர்.
image
நடிகர் விஜய்யை போல தோற்றம் கொண்ட நபரை பெண்கள் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு, அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த மாஸ்டர் திரைப்படத்தின் விஜய் போல உடையணிந்து, வேட்பாளருக்கு ஆதரவாக அந்த இளைஞர் பரப்புரை மேற்கொண்டார்.வீடு வீடாக சென்றும், காரில் மேல்புறத்தில் நின்று தென்னை மரச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் தேநீர் கடையில் வாக்கு சேகரிக்கும் போது வடை சுட்டும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
image
நடிகர் விஜய்யைப் போன்ற தோன்றம் கொண்டவரை அதிகமான மக்கள் கூடியதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. உண்மையான விஜய்க்கு எந்தளவு வரவேற்பு கிடைக்குமோ அதே போல பூக்களை தூவியும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.