5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுப்பு!

லண்டன்
தேம்ஸ் நதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிராபிக் டிசைனரான
சைமன் ஹண்ட்
என்பவர் தனது படகில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, நதியின் கரையில் ஆழம் குறைந்த, பாறைகள் நிறைந்த பகுதியில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான கட்டை வடிவிலான பொருள் கிடந்ததை கண்ட அவர் அதனை தனது வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியிடம் அதனை காட்டிய அவருக்கு அது ஒரு எலும்பு என தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். அத்துடன் அந்த எலும்பை எங்கு எடுத்தார் என்றும் போலீசாரை அழைத்து சென்று காண்பித்துள்ளார்.

அதன்பிறகு, அந்த எலும்பை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த எலும்பு வித்தியாசமாக இருந்ததால் அதனை அவர்கள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையில் அந்த எலும்பு கற்காலத்தின் இறுதி ஆண்டுகளை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

கனடா படகு விபத்து: 10 பேர் பலி; 11 பேர் மாயம்!

அந்த எலும்பு கிமு 3,516 மற்றும் 3,365 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டு காலத்தை சேர்ந்தது எனவும், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவருடையது எனவும் தெரியவந்துள்ளது. அந்த எலும்பை உடையவர் 5 அடி 7 இன்ச் (170செமீ) உயர் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. தொடைப்பகுதி அல்லது காலின் மேல் பகுதியின் எலும்பாக அது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த எலும்பை உடையவர் ஆணா அல்லது பெண்ணா என்பது இன்னும் தெரியவரவில்லை.

தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்பு தற்போது சைமன் ஹண்ட் வீட்டில் உள்ளது. ஆனால், கூடிய விரைவில் அது ஆருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.