இந்தியாவில் மாஸ்-ஆ களமிறங்கிய மாஸா.. எப்படி தெரியுமா?

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நமது ஊர்களில் ஆங்காங்கே சிறு கடைகள் முளைத்து விடும். பழக்கடைகள், ஜூஸ் கடைகள், வெயிலை தணிக்கும் மோர், கூழ் இப்படி ஏராளமானவற்றை பார்க்கலாம்.

இப்படி ஏராளமானவற்றிற்கும் மத்தியில் மாஸா, கோகா கோலா என பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகளும் களை கட்டும். வியாபாராம் கல்லா கட்டும்.

இப்படி மக்கள் விரும்பி குடிக்கும் குளிர்பானங்கள் என்னென்ன? குறிப்பாக இந்தியர்கள் அதிகம் விரும்பும் பானம் எது? அதன் விற்பனை எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

அசைக்க முடியாத சீன நிறுவனங்கள்.. 2 வருடத்தில் மொத்தமும் மாறியது..! #Xiaomi

விற்பனை

விற்பனை

அறிக்கைகளின் படி, கோகா கோலாவின் பிராண்டுகளான மாஸாவின் விற்பனை விகிதமானது இந்திய சந்தையில் 2021ம் நிதியாண்டில் 2826 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே அடுத்த இடத்தில் லிம்காவும் உள்ளது. இதன் விற்பனை மதிப்பானது 2061 கோடி ரூபாயாகும்.

தம்ஸ் அப் பிராண்ட்

தம்ஸ் அப் பிராண்ட்

1993ம் ஆண்டு லிம்கா மற்றும் மாஸா உள்ளிட்டவற்றை தம்ஸ் அப் நிறுவனத்துடன் இணைந்து கோகா கோலா நிறுவனம் கையகப்படுத்தியது. தம்ஸ் அப் பிராண்ட் தற்போது பில்லியன் டாலர் பிரண்டாக மாறியுள்ளது. இதன் மதிப்பு 7500 கோடி ரூபாயாகும்.

விருப்பமான பிராண்டுகள்
 

விருப்பமான பிராண்டுகள்

கோகா கோலாவுக்கு முன்னதாக மாஸாவும், லிம்காவும் பிரபலமான பிராண்டாக மக்கள் மத்தியில் மாறி வருவதாக இந்த நிறுவனத்தின் தென் மேற்கு தலைவர் சங்கேத் ரே கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது மாஸா மூன்றாவது இடத்திலும், இதே லிம்கா 6வது இடத்திலும் விற்பனை அடிப்படையில் உள்ளது.

லிம்கா சிறு பிராண்டு

லிம்கா சிறு பிராண்டு

தற்போதைய நிலவரப்படியோ கோக்கினை விட மாஸா தான் சிறப்பாக உள்ளது. இதே லிம்கா சிறிய பிராண்டாகவும் உள்ளது. இது தான் இன்றைய நிலை.

லிம்கா பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் வடக்கு பகுதிகளில் விருப்பமான ஒன்றாக இருந்து வருகின்றது. மற்ற பகுதிகளில் பெரியளவில் மக்களை சென்றடையவில்லை. ஆக வரவிருக்கும் ஆண்டுகளில் லிம்கா பிராண்டினை மேம்படுத்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மாஸ் ஆனா மாஸா

மாஸ் ஆனா மாஸா

இது மெதுவாக வியாபாரம் மேம்படலாம். மாஸா நல்ல படியாக இருந்து வருகின்றது. இது கடந்த ஆண்டினை காட்டிலும், அதிக சந்தை மதிப்பினை கவர்ந்துள்ளது.

இதே ஆரஞ்சு பிளேவரில் இருக்கும் இரு பிராண்டுகளும் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Maaza announced higher sales than coke at Rs.2826 crore

Maaza announced higher sales than coke at Rs.2826 crore/இந்தியாவில் மாஸ்-ஆ களமிறங்கிய மாஸா.. எப்படி தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.