மெக்சிகோவில் அன்மையில் அடுத்தடுத்து 5 செய்தியாளர்கள் சுட்டுக் கொலை; நாடாளுமன்றக் கூட்டத்தொடரை குறுக்கிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் <!– மெக்சிகோவில் அன்மையில் அடுத்தடுத்து 5 செய்தியாளர்கள் சுட்… –>

மெக்சிகோவில் அன்மையில் 5 செய்தியாளர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்கள், உயிரிழந்த தங்கள் சகாக்களுக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர்.

கடந்த ஒன்றரை மாதத்தில் குற்றங்கள் அங்கு தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்களை பத்திரிக்கையாளர்கள் நடத்தினர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், கூட்டத்தொடரை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.