Flipkart Sale: வெறும் 174 ரூபாய்க்கு ரியல்மி 5ஜி போன்; பிளிப்கார்ட் அதிரடி தள்ளுபடி விற்பனை!

பிளிப்கார்ட், Amazon shopping தளங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் பயன்பெறுவது என்னமோ வாடிக்கையாளர்கள் தான். நீ பெருசா, நான் பெருசா என்ற போட்டியில் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை இரு நிறுவனங்களும் மாறி மாறி வழங்கி வருகிறது. அந்த வகையில், Flipkart வாடிக்கையாளர்களுக்கு மொபைல்கள் மீது கூடுதல் சலுகைகளை அளித்து வருகிறது.

தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து சொர்ப்ப விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். ஆம், புதிய சலுகையாக ரியல்மி நிறுவனத்தின் 5ஜி போன் வெறும் ரூ.174க்கு விற்கப்படுகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தினால், இந்த விலைக்கு 5ஜி போனை வாங்கலாம். சலுகை விலையில்
Realme 8 5G
ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய பொருள்களுக்கு தனிக் கடை – ‘Made in India’ தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அமேசான்!

174 ரூபாய்க்கு 5ஜி போன்

ரியல்மி 8 5ஜி
ஸ்மார்ட்போனின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சீசன் நேரடி தள்ளுபடியாக ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும் பயனர்கள் Flipkart Axis Bank Credit Card கொண்டு இந்த போனை ஆர்டர் செய்யும்போது கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ. 825 போனின் விலையில் இருந்து குறைக்கப்படும். இப்போது போனின் விலை ரூ.15,674 ஆக இருக்கும்.

பிளிப்கார்ட் பழைய போன்களுக்கு நல்ல விலை தருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்குகிறது. அதன்படி, பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை Exchange செய்ய விரும்பினால், பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.15,500 வரை பெறலாம். உங்கள் போனின் நிலையை பொறுத்தே Exchange Value நிர்ணையிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

50MP சோனி OIS கேமரா… வெளியானது Realme 9 Pro Plus 5G சூப்பர் கேமரா மொபைல்!

போனில் தள்ளுபடி விலையான ரூ.15,674இல், உங்கள் பழைய போனுக்கு கிடைத்த எக்ஸ்சேஞ்ச் விலையை கழித்தால் ரூ.174 வரும். எனவே, உங்களின் பழைய போனுக்கு நல்ல வேல்யூ கிடைத்தால், புதிய ரியல்மி 8 5ஜி போனை நீங்கள் வெறு ரூ.174க்கு தட்டிச்செல்ல முடியும்.

ரியல்மி 8 5ஜி சிறப்பம்சங்கள் (Realme 8 5g specifications)

இந்த ஸ்மார்ட்போனானது 6.5″ அங்குல முழு அளவு எச்டி+ திரையைக் கொண்டுள்ளது. 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் இந்த திரைக்கு வழங்கப்பட்டுள்ளது. 405ppi திரை அடர்த்தியைக் கொண்டிருக்கிறது இந்த டிஸ்ப்ளே. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 ஸ்கின் உதவியுடன் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 700 5ஜி சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ARM மாலி ஜி57 கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்ட்டின் கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்கு உதவியாக உள்ளது.

கேமராவைப் பொருத்தவரை, 48 மெகாபிக்சல் Nightscape கேமரா, ஒரு Bokeh லென்ஸ், ஒரு மேக்ரோ லென்ஸ் ஆகியவைக் கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்புடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை 5ஜி சிம் ஆதரவுடன் வருகிறது.

செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!

ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 18W குவிக் சார்ஜ் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஆதரவுடன் ரியல்மி போன் வருகிறது. எஸ்டி கார்ட் ஆதரவுடன் 1TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி உள்ளது.

அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த ரியல்மி போன் பெறுகிறது.

Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

Realme-8-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Dimensity 700 MT6833டிஸ்பிளே6.5 inches (16.51 cm)சேமிப்பகம்64 GBகேமரா48 MP + 2 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை13999ரேம்4 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.