வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த சாரைப்பாம்பு: அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்

கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி வாக்கு எண்ணும் மைய பணியின்போது பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம், வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தை கடந்த 10 நாட்களாக தயார் செய்து வரும் நிலையில், இன்று இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
image
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரி கார்டுகளையும், மர பலகைகளையும் தொழிலாளர்கள் எடுத்தனர். அப்போது அதற்குள் இருந்து சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு வெளியேறியது. இதனை கண்டு அச்சமடைந்து பலரும் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
image
அதை பார்த்த தொழிலாளி ஒருவர் துணிச்சலோடு நீண்ட தடியால் பாம்பை அடித்துக் கொன்றார். இதனால் அங்கு பணியில் உள்ள தொழிலார்கள் அச்சத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.