மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து! முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்


இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர்.

தகவல் அறிந்த கோட்டா போலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று  விசாரணை நடத்தியதில், உஜ்ஜயினில் நடக்கவிருந்த திருமணத்துக்காக சென்ற போது காலை 7.30 மணியளவில் விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள கோட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு பணித்திருக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என டுவிட் செய்துள்ளார்.

விபத்தில் பலியானவர்களின் முழு விபரங்கள்

Kishan Gopal-ன் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகனுக்கு திருமணம் ஆகவில்லை.

அவரது இளைய மகனான Avinash Valmikiயே மணமகன் ஆவார், கடந்த ஞாயிறன்று Neha என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமண சடங்களுக்காக அனைவரும் தயாரான நிலையில் மணமகனின் கார் வர தாமதம் ஆனதால், அவரது மாமாவை விட்டு விட்டு மணமகனை உறவினர்களுடன் வேறொரு காரில் அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளார் Kishan Gopal.

அனைவரும் உற்சாகமாக புறப்பட்ட நிலையில், அதிகாலையில் விபத்து நடந்துள்ளது, இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம் Avinashன் மாமா.

இந்த விபத்தில் மணமகன், மணமனின் சகோதரர், மணமகனின் மச்சான் உட்பட 9 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.