மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி

மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி

மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி

2/21/2022 12:10:18 PM

சிவகாாத்திகேயன் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நண்பர் சூரியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடிய  எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும், தங்கள் அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி.

இறுதியாக, எனது சொந்த ரசிகர்களுக்கு – எனது சகோதர சகோதரிகளுக்கு நன்றி. சமூக ஊடகங்களில் அனைத்து அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்காகவும், மாநிலம் முழுவதும் மக்கள் நல உதவிகளை வழங்கியதற்காகவும் நன்றி கூறுகிறேன்.  பிறந்த நாளை மறக்கமுடியாததாக மாற்றியதற்கு நன்றி. உங்களை மகிழ்விக்கும் படங்களில் நிச்சயம் நடிப்பேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் அன்பு. உங்களுடையது. இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.