உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் அந்நாட்டிற்கு சென்று ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிய செல்லலாம் என லட்வியா அறிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் லட்வியா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களில் யார் வேண்டுமானாலும் போர் செய்ய செல்லலாம் என்றும் லட்வியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.