ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
ஈஸ்ட் பெங்கால்  அணி விளையாடிய 18 போட்டிகளில் 1 வெற்றி ,7 டிரா ,10 தோல்வி என புள்ளி பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது . நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 19 போட்டிகளில் 3 வெற்றி , 4 டிரா ,12 தோல்வி ,என புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.