ரஷ்யாவின் ரூபள் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி

ரஷ்யா – உக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாடுகள் இரண்டிலும் நிதி செலவினம் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் ரூபிள் நாணயமொன்று டொலருக்கு அமைவாக 30 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று பங்கு சந்தையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் விலை அதிகரித்தது. இருப்பினும் தற்பொழுது ஓரளவு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கமைவாக அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 97.22 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. லண்டன் ப்ரண்டி சந்தையில் இது 103.6 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ,யுத்தத்தில் தமது நாட்டு பிரஜைகள் 352 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின்னர்  நாடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான பேச்சுவார்த்தை பெலரூஸ் எல்லை பகுதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனில் உள்ள உலகின் பாரிய விமானம் ரஷ்ய தாக்குதலினால் அழிக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களின் பாரிய கவலைக்குரிய விடயமாகும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.