விவாகரத்திற்கு பிறகு முதல்முறை சந்தித்துக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா.. எங்கு தெரியுமா ?

நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தனர். இந்த செய்திதான் தற்போதுவரை பேசும்பொருளாக உள்ளது. இவர்கள் பிரிவிற்கு பலரிடமிருந்து பல காரணங்கள் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரிவு இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை மிகவும் பாதித்துள்ளது.

இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்களது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

யுவனிடம் விஜய் சொன்ன அந்த விஷயம்..இதுவரை யுவன் வெளியில் அந்த விஷயத்தை சொன்னதே இல்லையாம்..!

தனுஷ்
வாத்தி
மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார். ஐஸ்வர்யா தான் இயக்கும்
ஆல்பம்
பாடல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். விவகாரத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் இருந்தனர்.

ஆனால் தற்போது வந்த தகவலின் படி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்டதாக தெரிகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டாலும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லையாம்.

மேலும் தனுஷின் நண்பர்கள் ஐஸ்வர்யாவிடமும், ஐஸ்வர்யாவின் நண்பர்கள் தனுஷிடமும் பேசினார்களாம். இருப்பினும் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்த அவர்களது நண்பர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். இதை வைத்து பார்க்கையில் இவர்கள் இருவரும் மீண்டும் சேருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.