அமெரிக்க டெக் நிறுவனத்தில் இனி நேரடியாக முதலீடு செய்யலாம்.. NSE அறிவிப்பு..!

என்எஸ்ஈ இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் (NSE IFSC), இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (NSE) கீழ் உருவாக்கப்பட்ட துணை நிறுவனமாகும். NSE IFSC தளத்தின் மூலம் முதற்கட்டமாக 8 அமெரிக்க டெக் நிறுவன பங்குகளில் இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்து, வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

அமெரிக்கப் பங்குகளின் முழு வர்த்தகம், கிளியரிங்,
செட்டில்மென்ட் மற்றும் ஹோல்டிங் ஆகிய அனைத்தும் என்எஸ்ஈ IFSC ஆணையத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் இருக்கும்.

20 ஆண்டு திட்டம்… 45 வயதிலேயே ஓய்வுகாலத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்.. ரெடியாகிக்கோங்க..!

அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க நிறுவனங்கள்

மார்ச் 3ஆம் தேதி முதல் இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய NSEIFSC தனது வர்த்தகத் தளத்தில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட், அமேசான், டெஸ்லா, பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா, மைக்ரோசாப்ட், ஆப்பிள், நெட்பிளிக்ஸ் மற்றும் வால்மார்ட் ஆகிய 8 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய ரெசிப்ட் வெயிட்டு உள்ளது.

கூடுதலான நிறுவனங்கள்

கூடுதலான நிறுவனங்கள்

மேலும் பெர்க்ஷயர் ஹாத்வே, அடோபி, மாஸ்டர்கார்டு, ஜான்சன் அண்ட் ஜான்சன், வெல்ஸ் பார்கோ போன்ற இதர பல முக்கிய அமெரிக்க நிறுவன பங்குகளை விரைவில் வர்த்தகம் செய்வதற்காக NSEIFSC தளத்தில் சேர்க்கப்பட உள்ளதாகத் தனி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

கிஃப்ட் சிட்டி டிமேட் கணக்கு
 

கிஃப்ட் சிட்டி டிமேட் கணக்கு

முதலீட்டாளர்கள் கிஃப்ட் சிட்டியில் திறக்கப்பட்ட தங்கள் சொந்த டிமேட் கணக்குகளில் டெபாசிட்டரி ரசீதுகளை வைத்திருக்க முடியும் மற்றும் அடிப்படை பங்கு தொடர்பான கார்ப்பரேட் நடவடிக்கை பலன்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவார்கள்.

ரிசர்வ் வங்கியின் LRS அளவீடு

ரிசர்வ் வங்கியின் LRS அளவீடு

இந்தப் பங்கு முதலீட்டுச் சந்தையில் முதல் முறையாக வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பரிந்துரைத்துள்ள தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்ட (எல்ஆர்எஸ்) வரம்புகள் மற்றும் அளவுகளின் கீழ் மட்டுமே என்எஸ்ஈ ஐஎஃப்எஸ்சி தளத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.

fractional quantity-யில் முதலீடு

fractional quantity-யில் முதலீடு

என்எஸ்ஈ ஐஎஃப்எஸ்சி மூலம் வெளிநாட்டுப் பங்குகள் மீதான முதலீடுகள் எளிதாக்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் மற்ற தளங்களைக் காட்டிலும் இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்குக் குறைந்த செலவில் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அமெரிக்கப் பங்குகளின் விலையில் இந்தியாவில் முதலீடு செய்யக் கடினம் என்பதால் fractional quantity-யில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Retail Investors can invest Google, Apple, Tesla, 5 other US stocks on NSE IFSC from today

Indian Retail Investors can invest Google, Apple, Tesla, 5 other US stocks on NSE IFSC from today அமெரிக்க டெக் நிறுவனத்தில் இனி நேரடியாக முதலீடு செய்யலாம்.. NSE அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.