உக்ரைன் மீதான தாக்குதலில் தங்களது இலக்குகள் எட்டப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் தொலைபேசி மூலம் உரையாடிய போது புதின் இவ்வாறு தெரிவித்ததாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தினால், தங்களது கோரிக்கைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் புதின் கூறியுள்ளார்.
இதனிடையே ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெறுகிறது. அதற்காக உக்ரைன் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் பெலாரஸ் எல்லைக்கு சென்றடைந்துள்ளனர்.