உண்மையில் வேதனையாக இருந்தது! – பதவி நீக்கப்பட்ட பின்னர் கம்மன்பில தெரிவிப்பு



பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அந்தந்த அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், இன்று (03) மாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இருவரையும் அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“காலையில் அமைச்சு மாலை கிடையாது. அமைச்சு பதவிகள் நிரந்தரம் இல்லை. அதனால் அடுத்த அமைச்சு பதவிக்காக மனசாட்சியை மறைக்க முடியாது.

உண்மையில் பயமாகவும் வேதனையாகவும் இருந்தது. இந்நிலையில், 11 கட்சி தலைவர்கள் நாளை கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.