ஷாரூக் கான் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர். பதான் படத்தின் டீசரை வெளியிட்ட பிறகு 10 நிமிடங்களுக்கு Ask Me Anything பகுதியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். ரசிகர்கள் சராமாரியாக பால் போட எல்லாவற்றையும் சிக்ஸர்களாக விளாசியிருக்கிறார், ஷாரூக். “இத்தனை நாட்களாக எங்க போனீங்க” என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டிருந்தார். ட்விட்டரில் பல நாட்களாக ஷாரூக்கை காணவில்லை. அந்தக் கேள்விக்கு ‘என்னுடைய எண்ணங்களுக்கு…’ எனப் பதிலளித்திருக்கிறார். அமீர்கானின் லால் சிங்க் சத்தா படம் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, “அரே அமீர் முதலில் பதான் படம் பார்க்க என்னிடம் கேட்கட்டும்”
I look the same only since 32 years now….ha ha. What look…it’s the same my handsome self… https://t.co/Zm0toeAEq6
— Shah Rukh Khan (@iamsrk) March 2, 2022
பதான் பட டீசரில் ஷாரூக் முகம் தெளிவாக காட்டப்படவில்லை. அவர் நீள முடியோடு முன்னோக்கி வருவது மட்டுமே தெரிகிறது. ஒருவர், “உங்க லுக் எப்போது வெளியிடப்படும்” என்று கேட்டதற்கு, “32 வருடங்களாக ஒரே லுக்கில் தான் இருக்கிறேன். ஹாஹா என்ன லுக். எப்போதும் போல ஹண்ட்ஸம் தான்” என்று நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார். இன்னொரு ரசிகர், “பதான் படத்தில் இருப்பது போல முடியை வளர்க்க எத்தனை நாட்கள் ஆனது. நீங்க எக்ஸ்ட்ரா எதுவும் வைக்கவில்லை என நினைக்கிறேன்” என்பதற்கு ஷாருக், “என்னைப் போல முடி வளர்க்க அதிக நாட்கள் ஒன்றும் ஆகாது. சொந்தமாக வளர்த்தது” எனப் பதில் கொடுத்திருக்கிறார். பதான் திரைப்படம் ஹிந்தி,தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 25, 2023 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடிக்க சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார்.