பிரித்தானியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரர்: தடைகள் விதிக்கப்படும் என பயந்தாரா?


உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்க பிரித்தானிய பிரதமர் முடிவு செய்திருக்கும் நேரத்தில் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்புடைய நபர்கள் மீது தடைகள் விதிக்க முடிவு செய்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தடைகள் விதிக்கப்பட இருக்கும் ரஷ்ய நாட்டவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள சர்ரேயில், செல்வச் செழிப்புடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ரஷ்ய கோடீஸ்வரரான Mikhail Watford என்பவர், தனது கார்கள் நிறுத்தும் கிடங்கினுள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Mikhail வீட்டில் வேலை செய்யும் தோட்டக்காரர் ஒருவர், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்.

உக்ரைன் சோவியத் யூனியனிலுள்ள ஒரு நாடாக இருக்கும் போது உக்ரைனில் பிறந்த Mikhail, பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து, தனது ரஷ்யப் பெயரான Mikhail Tolstosheya என்பதை Mikhail Watford என மாற்றிக்கொண்டுள்ளார்.

தன் மனைவி Jane மற்றும் மூன்று பிள்ளைகளுடன் 18 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய மாளிகை ஒன்றில் வாழ்ந்துவந்த Mikhail மர்மமான முறையில் உயிரிழந்ததால், அவருக்கு அறிமுகமானவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

உக்ரைனில் நிலவும் சூழல் அவரது மனதை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர் ஒருவர், அவர் மரணம் அடைந்த நேரமும், உக்ரைன் ஊடுருவல் நிகழ்ந்த நேரமும் ஒன்றாக அமைந்தது, நிச்சயம் தற்செயலாக நிகழ்ந்தது அல்ல என்கிறார்.

ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்புடைய நபர்கள் மீது தடைகள் விதிக்க இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்ததைத் தொடர்ந்து, தடைகள் விதிக்கப்பட இருக்கும் நபர்கள் பட்டியலில் தன் பெயரும் இருக்கலாம் என அஞ்சி Mikhail இந்த முடிவை எடுத்தாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

பொலிசார் Mikhailஇன் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.