வாஷிங்டன்: விண்வெளியில் சுற்றி வரும் சுமார் 3 டன் எடையுடைய விண்வெளி குப்பை, நாளை (மார்ச் 4) நிலவில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
3 டன்
குப்பை
நிலவில்
மோதுகிறது
பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக, அங்கேயே சுற்றி வருகின்றன. இதில், சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவில் மோதும் என கடந்த ஜனவரி மாதமே நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி, 3 டன் விண்வெளி குப்பை நாளை (மார்ச் 4) நிலவில் மோத உள்ளதாகவும், அது மணிக்கு 9,300 கி.மீ வேகத்தில் மோதும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வு நிலவின் பின்புறம் நடக்க இருப்பதால், தொலைநோக்கியால் பார்க்க முடியாது எனவும், செயற்கைக்கோள் படங்கள் மூலம் பாதிப்பை உறுதிப்படுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவ்வளவு வேகத்தில் நிலவில் 3 டன் விண்வெளி குப்பை மோதுவதால், நிலவில் சுமார் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement