ஜீ தமிழ் டிவியில் மெகா திருமண வைபவம் : தொடர்களின் திருமண எபிசோட்களின் சிறப்பு ஒளிபரப்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சி 2022ம் ஆண்டினை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளை துவங்கியதன் மூலமாகவும் விமர்சையாகத் துவங்கியது. இப்போது மார்ச் மாதத்தில் அனைவரையும் கோலாகலத்தில் மூழ்கடிக்க மெகா திருமண வைபவத்தை நிகழத்த ஜீ தமிழ் தயாராகிவிட்டது. இந்த சிறப்பு இரண்டு மணிநேர கல்யாண வைபோகம் ஒரு வாரந்திரத் நிகழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு தொடர்களில் வரும் திருமண எபிசோட்களை மட்டும் சிறப்பு எபிசோடாக ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள். இதற்கு மெகா திருமண வைபவம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

வருகிற 6ம் தேதி முதல், ஞாயிறுதோறும் மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. முதல் எபிசோடில் 'அன்பே சிவம்' தொடரின் நல்ல சிவம் மற்றும் கவிதா திருமணம் ஒளிபரப்பாகிறது.

13ம் தேதி, ரஜினி தொடரில் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ரஜினி தனது காதலை தியாகம் செய்து, தனது காதலனை தன் தங்கைக்கு விட்டுக்கொடுத்து திருமணம் செய்ய அனுமதிக்கிறாள். அந்த திருமணம் ஒளிபரப்பாகிறது.

பேரன்பு மற்றும் வித்யா நம்பர் 1 தொடரின் ஜோடிகளுக்கு வரும் மார்ச் 20 மற்றும் மார்ச் 27ம் தேதிகளில் முறையே திருமணம் நிகழவுள்ளது.

தொலைக்காட்சி வரலாற்றில் இது ஒரு புதுமையானது என்று சேனல் அறிவித்துள்ளது. இந்த கல்யாண சீசனில் அனைத்து தொடர்களிலிருந்தும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் மனதைத் தொடும் நிறைவான காட்சிகளை இந்த மெகா திருமண வைபவத்தின் மூலமாக ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு, ஜீ தமிழில் மட்டுமே காணவுள்ளோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.