பெட்ரோல் லிட்டருக்கு 12 ரூபாய் உயரும்.. ஜகா வாங்கிய OPEC நாடுகள்.. ரெடியா இருங்க..!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாகக் கடந்த 4 மாதங்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஓரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 120 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இந்த விலை வித்தியாசத்தைச் சமாளிக்க வேண்டும் என்றால் கட்டாயம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டாயம் உயர்த்த வேண்டும், இல்லையெனில் அரசு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும்.

பெட்ரோல் விலை அடுத்த வாரம் முதல் உயரும்.. ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயரும் தெரியுமா..?!

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஐரோப்பியா நாடுகளின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றும் ஒரு பேரல் 120 டாலர் வரையில் உயர்ந்தது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 115 டாலர் வரையில் உயர்ந்தது. உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் மேம்படவில்லை எனில் கட்டாயம் 145 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொடும்.

 OPEC நாடுகள்

OPEC நாடுகள்

கச்சா எண்ணெய் விநியோகம் மேம்பட OPEC நாடுகள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்தும் அமைதியாக உள்ளது. வியாழக்கிழமை நடந்த முக்கியமான OPEC கூட்டம் வெறும் 13 நிமிடத்தில் முடிக்கப்பட்டு உள்ளது.

 ஜகா வாங்கிய வளைகுடா நாடுகள்
 

ஜகா வாங்கிய வளைகுடா நாடுகள்

இதனால் OPEC அமைப்பு நாடுகள் கூடுதலாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யாது என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் OPEC நாடுகள் ரஷ்யாவுக்குச் சாதகமாக உள்ளது. இல்லையெனில் கூடுதல் வருமானத்திற்குக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட படி 4,00,000 பேரல்களை ஏப்ரல் மாதம் முதல் கூடுதலாக உற்பத்தி செய்ய உள்ளது OPEC நாடுகள்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

ஏற்கனவே சர்வதேச எனர்ஜி அமைப்பு எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தக் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைச் சிறப்பான முறையில் கையாள வேண்டியது அனைத்து நாடுகளுக்கும் கட்டாயமாகியுள்ளது.

 விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

இந்நிலையில் இந்தியாவில் நவம்பர் 2021ல் இந்தியா சராசரியாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 81.5 டாலரில் விற்பனை செய்யப்பட்ட போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்தியுள்ளது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 111.99 டாலராக உயர்ந்துள்ளது.

 லிட்டருக்கு 12 ரூபாய் உயர்வு

லிட்டருக்கு 12 ரூபாய் உயர்வு

கச்சா எண்ணெய் இறக்குமதி விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வை சமாளிக்கக் கட்டாயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 ரூபாய் வரையில் மார்ச் 16ஆம் தேதிக்குள் உயர்த்த வேண்டும், இல்லையெனில் கடுமையான நிதி நெருக்கடிக்குள் எண்ணெய் நிறுவனங்கள் சிக்கும்.

 பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், மக்களும், வர்த்தகர்கள் இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும். முடிந்தால் இன்றே ஸ்டாக் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 5 மாநில தேர்தல்கள் முடியும் நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர துவங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol price May Hike up to 12 rupees per liter; Common people need to be cautioned and prepared

Petrol price May Hike up to 12 rupees per liter; Common people need to be cautioned பெட்ரோல் லீட்டருக்கு 12 ரூபாய் உயரும்.. ஜகா வாங்கிய வளைகுடா நாடுகள்.. ரெடியா இருங்க..!

Story first published: Friday, March 4, 2022, 19:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.