அதிமுகவுக்கு சசிகலா தலைமை தேவை.. ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா பேட்டி.!!

அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமை தேவை என ஓ ராஜா பேட்டி அளித்துள்ளார்.

சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார். திருச்செந்தூர் வந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் ஓ. ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓ ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமை தேவை. தனது விருப்பத்தின் படியே சசிகலாவை சந்தித்தேன். 

மேலும், உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சித் தலைமையில் இருந்த அதிமுக ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார். ஆகையால், சசிகலாவின் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.