ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்தப் படத்தின் முக்கிய அப்டேட்

ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 2018-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார் . இதனிடையே படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாகத் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.