அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.!

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாங்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ளா அரசாணையில், வரும் நிதியாண்டிலிருந்து நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பருவ இதழ்களை அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில், அவற்றை தோ்வு செய்யவும், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் ஏற்கனவே உள்ள நாளிதழ்கள், பருவ இதழ்கள் தொகுப்பை மறுசீரமைப்பதற்கும் குழு அமைக்க வேண்டும் எனவும், இந்தக் குழுவுக்கு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் பொது நூலக இயக்குநர் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் இந்தக் குழு 15 நாட்களுக்குள் அதன் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் இவற்றுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று, அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை கொள்முதல் செய்ய நாளிதழ்கள், பருவ இதழ்களை மறுசீரமைப்பதற்கு ஓா் குழுவை அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கட்டுரையாளா்கள் ஜெயராணி, தினேஷ் அகிரா, மருத்துவா் கணேசன், அ.அருண்குமாா், எழுத்தாளா் அதிஷா வினோ, பேராசிரியா் விஜயபாஸ்கா், பேராசிரியா் வீ.அரசு

பத்திரிகையாளர்கள் சமஸ், சுட்டி கணேசன், யுவராஜ் பேராசிரியா் கரு.ஆறுமுகத் தமிழன் ஆகியோா் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனா்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.