27 நாடுகள், 100 நாள்கள்… மண் வளத்துக்காக பைக் பயணம் செல்லும் ஈஷா ஜக்கி வாசுதேவ்!

கோவை ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ பைக்கில் பயணம் செய்ய உள்ளார். இதற்காக, ஏராளமான ஈஷா தன்னார்வலர்கள் ஆதியோகி முன்பு திரண்டு அவரை வழியனுப்பி வைத்தனர்.

ஜக்கி வாசுதேவ்

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தைத் தொடங்கும் அவர், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜக்கி வாசுதேவ், “மண் காப்போம் என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகளும், ஐ.நா அமைப்புகளும் மண் வளம் இழப்பதால் ஏற்பட போகும் பேராபத்து குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

ஜக்கி வாசுதேவ்

2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக அதிகரித்துவிடும் எனவும், ஆனால் உணவு உற்பத்தி தற்போது இருப்பதை விட 40 சதவிகிதம் குறைந்துவிடும் எனவும் கூறுகின்றனர். இதனால், 192 நாடுகளில் மண் வள பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்க நாங்கள் வலியுறுத்த உள்ளோம்.

இதற்காக, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். நாங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் அங்குள்ள விவசாய முறைகள் மற்றும் மண்ணின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு மண் வள பாதுகாப்பு கொள்கைகளைத் தயாரித்து இருக்கிறோம். இந்த முயற்சியில் ஐ.நா-வின் அங்கமாக இருக்கும் UNCCD, UNEP, WFP ஆகிய 3 அமைப்புகள் ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.

மண் வளம்

அத்துடன், உலக அளவில் பிரபலமான இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பல தரப்பினரும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுக்க உள்ளனர். இந்தப் பயணத்தில் பல சவால்கள் இருக்கின்றன!” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.