சென்னை, கோவை, நெல்லை… 8 மாவட்டங்களில் பாஜக கமிட்டிகள் கலைப்பு; புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

Tamilnadu BJP News Update : தமிழக பாஜகவில் கட்சியை சீரமைக்கும் வகையில் 8 மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் குழு அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போடடியிட்ட பாஜக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அதிலும் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவுடன் போட்டி போடும்அளவுக்கு பாஜக வெற்றியை பெற்றிருந்தது.

இதன் மூலம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஓராளவுக்கு சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளது என்று கூறி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியை சீரமைக்கும் வகையில் 8 மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிககள், அணிகள், மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுவதாக அதன் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர். புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு,  திருவண்ணாமலை வடக்கு உள்ளிடட பகுதிகளில், உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிககள், மண்டல கமிட்டி நிர்வாகிகள் என அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவம் வரை தற்காலிகமாக பணியாறறும் வகையில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிடடுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.