தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்றவர்கள் கைது <!– தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்… –>

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்ற 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பஞ்சலிங்கால சோதனை சாவடியில் அதிகாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஹைதராபாத்தில் இருந்து வந்த கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது 5 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகள், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்டவை இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவற்றை எடுத்துச்சென்ற கோயம்புத்தூரை சேர்ந்த ஒருவரையும், சேலத்தை சேர்ந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 90 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.