சினைப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு வேண்டுமா? கவலையை விடுங்க.. இதோ சில எளிய சித்த மருத்துவம்பொதுவாக பல லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.

 குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வராதது, அதிக நாள்கள் ரத்தப்போக்கு இருப்பது, அளவுக்கதிகமான அல்லது மிகக்குறைவான அளவே ரத்தப்போக்கு, மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது என்று பெண்களுக்கு மாதவிடாயில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இப்படியான சிக்கல்கள் வரும் போது நாம் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் சினைப்பை நீர்க்கட்டியை போக்க கூடிய சில சித்த மருத்துவங்களை இங்கே பார்ப்போம்.  

  • கழற்சிக்காய்த்தூள் 1 கிராம் உடன் 5 மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர கருப்பையில் உண்டாகும் சினைப்பை நீர்க்கட்டி கரையும்.
  • கருஞ்சீரகம் 1 கிராம் , சோம்பும் 1 கிராம் அளவிற்கு சம அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2கிராம் அளவு தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி கரையும்.
  • சோற்றுக்கற்றாழையை மேல்தோல் நீக்கிவிட்டு அதில் உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக 7 முறை கழுவிட்டு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு 1 டம்ளர் மோரில் கலக்கி வாரம் இருமுறை குடித்துவர சினைப்பை நீர்க்கட்டி குறையும்.
  • எள் – 1 கிராம், வெந்தயம் – 1 கிராம் சமஅளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2 கிராம் அளவு காலை மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சினைப்பை நீர்க்கட்டி கரையும்.
  • கொள்ளு 1 கிராம், மஞ்சள் கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன் இந்த அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் கசாயம் செய்து குடித்துவர நீர்க்கட்டி குறையும்.
  • வெட்சி பூ – 1 கொத்து, மிளகு – 5 (தூள் செய்து) இதனை குடிநீரிட்டு 60 மில்லி காலை மட்டும் 3 மாதம் தொடர்ந்து குடித்துவர கருப்பை குற்றம் குறையும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் வராமல் தடுக்கும்.
  • இலவங்கப்பட்டை 2 கிராம், அதிமதுரம் – 1 கிராம் இந்த அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மட்டும் 1 கிராம் அளவு எடுத்து வைத்துக்கொண்டு கசாயமிட்டு 60 மில்லி குடித்து வர கருப்பை குற்றம் நீங்கி சினைப்பை கட்டி அகலும்.
  • சுக்கு – 1 கிராம், பெருங்காயம் – 1 கிராம் அதாவது சுக்கை தோல் நீக்கி இளவறுப்பாக எடுத்துக்கொண்டு அதனுடன் பொரித்த பெருங்காயம் சமஅளவு சேர்த்து வைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளை 1 கிராம் அளவு தேன் சேர்த்து தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி அகலும்.
  • மலைவேப்பிலைச்சாறு 60 மில்லி புதிதாக சாறு எடுத்து மாதவிடாயின்போது 3 நாளும் தினம் காலை 60 மில்லி உணவிற்குப் முன் அருந்திவர கருப்பையில் உண்டாகும் கட்டி சினைப்பை நீர்க்கட்டி நீங்கும். குழந்தையின்மை பிரச்சினை உள்ளவர்களும் இதை அருந்திவருவது நல்லது.
  • கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இவைகளை சம அளவு எடுத்து காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு 1 கிராம் அளவு எடுத்து வெல்லம் சேர்த்து கசாயம் செய்து காலை மாலை இருவேளை 60 மில்லி அருந்திவர பெண்களுக்கு கருப்பைக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம். நம் உடலில் இன்சுலின் ஹார்மோனை சரியான அளவில் வைத்துக்கொள்ளும் Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.