சுனாமி பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட தென்னிலங்கை சிறுமியின் இன்றைய பரிதாப நிலை(Photo)


சர்வதேச பெண்கள் தினமான இன்று தென்னிலங்கையில் சுனாமி பேரலையில் சிக்கிய ஐந்து வயது சிறுமி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

தங்காலையில் சுனாமியில் சிக்கிய 5 வயதுடைய சிறுமி 18 வருடங்களின் பின்னர் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வயது, உரிய பெயர், பிறப்பு சான்றிதழ் எதுவும் இல்லாமல் வாழும் இந்த பெண் கடுமையான வறுமையில் சிக்கித் தவிப்பதாக தெரியவந்துள்ளது.

சரியான வயது தெரியாத கே.ஏ.கமலா பெரேரா எனப்படும் அந்த பெண் தற்போது இலக்கம் 191, ஜயகம்புர மஹ அம்பகஸ்வெவ, மெதிரிகிரிய என்ற விலாசத்தில் வாழ்ந்து வருகின்றார்.

ஆரம்ப பாடசாலை மற்றும் இம்முறை புலமை பரிசில் பரீட்சை எழுதும் 2 பிள்ளைகளின் தாயான அவர் கணவனை இழந்துள்ளார். இந்த நிலையில் கூலி வேலை செய்து வாடகை வீடு ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்.

தங்காலை பிரதேசத்தில் பிறந்த அவர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலையில் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், சகோதரி மற்றும் தானும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முழு குடும்பமும் சுனாமியில் சிக்கி காணாமல் போன நிலையில் அவரை யாரோ ஒருவர் காப்பாற்றியுள்ள போதிலும் இன்று வரையிலும் அது யார் என தெரியாமலேயே போயுள்ளது.

தங்காலை பிரதேச சுனாமி முகாமில் இருந்த அவரை, தங்காலை பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

குறித்த அதிபர் அவருக்கு கமலா என பெயர் வைத்துள்ளார். 12 வயதாகும் போது அதிபர் புற்று நோயினால் உயிரிழந்துள்ளார்.

அதிபரின் சகோதரி கொழும்பில் உள்ள வீட்டிற்கு பணிப்பெண் போன்று பணியாற்ற அவரை அழைத்து சென்றுள்ளார்.

இரண்டு வருடங்கள் பணியாற்றிய நிலையில் அந்த வீட்டில் நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

14 வயதான சிறுமியாக இருக்கும் போதே குறித்த இளைஞன் அவரை அழைத்து சென்றுள்ளார். இளைஞனை சந்தித்த முதல் நாளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவராகும். அவர் கொழும்பு மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சில காலம் வாழ்ந்த நிலையில் அவருக்கு போலி வயது கூறி அடையாள அட்டை ஒன்றும் தயாரித்துள்ளார்.

உரிய கல்வி அறிவு இல்லாம் அன்புக்காக ஏங்கிய நிலையில் சிறு வயதிலேயே இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த பெண்ணுக்கு கணவனின் மோசமான செயற்பாடு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

அவர் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து செல்லும் நபர் என தெரியவந்துள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இன்றும் வாழ்வதற்கு இடமின்றி வாடனை வீட்டில் தவித்து வரும் இந்த பெண் யாராவது உதவி செய்வார்களா என காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.