சார்பில்லாத சம உரிமையே இவர்களின் விடுதலை – பெண்கள் தினத்தைக் கொண்டாடும் Google டூடுல்!

உலக மகளிர் தினம்
1911, ‘International Women’s Day’ மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர்.

1908களில் நியூயார்க்கில் பணிச்சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது. முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் பிப்-28, 1909 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

பெண்கள் தின வரலாறு

1914-இல் முதல் உலகப் போர் தொடங்கியது. அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள், தங்களின் முதல் பெண்கள் தினத்தை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். போருக்கு எதிராகவோ, ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவோ அதே வருடத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர்.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

தொடர்ந்து 1975 ஆம் ஆண்டில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. நூற்றாண்டுக்கு முன்பே போராளிகளாய் இருந்த பெண்களின் நிலை தற்போது தான் சிறிது சிறிதாக மேம்பட்டு வருகிறது.

வேலையில் பாகுபாடு

முறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் (வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வேலை கிடைக்கும்போது செய்பவர்கள்) தெற்காசியாவில் 95% விழுக்காடு பெண்கள் பணிபுரிகின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு, சட்டபூர்வ தடைகள் பாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சிக்குரியது.

சில பெண்கள் மட்டுமே, வேலையில் தங்களின் பங்களிப்பை சரியாக வெளிகாட்ட முடிகிறது. அலுவலக சூழலில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அவர்களை முடக்கி போடுகின்றன. தற்கால சூழலில், இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பெண்கள் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

delete google history: உங்கள் ரகசிய தகவல்களை கூகுள் சேமிக்கிறது! அதை அழிக்க என்ன செய்ய வேண்டும்?

அலுவலகத்தில் நேரிடும் பாலியல் குற்றங்களை கண்காணிக்க விசாகா அமைப்பும் தொடங்கப்பட்டது. எனினும், இன்னும் சில இடங்களில் பெண்களுக்கான சம உரிமை வழங்கப்படுவதில்லை. பெண்களுக்கான சம உரிமை கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிரான குற்றங்களும் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று நம்பலாம்.

கூகுள் வெளியிட்ட உலக பெண்கள் தின டூடுல்

கூகுள் நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அவர்களை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பெண்களை போன்றும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது.

மேலும், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் குறித்த அனிமேஷன் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியாக பெண்கள் நடத்தும்
YouTube
சேனல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

Read more:

பொது இடத்தில் Wi-Fi பயன்படுத்தும் நபரா நீங்கள் – இத தெரிஞ்சுக்கோங்க! யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி… இத மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க!PAN அட்டையை Aadhaar உடன் இணைத்துவிட்டீர்களா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.