பீஸ்ட் பட நடிகரின் அடாவடி… கைகலப்பில் முடிந்த சம்பவம்..!

விஜய்
நடிப்பில்
நெல்சன்
இயக்கியுள்ள படம்
பீஸ்ட்
. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் டாம் சாக்கோ 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் தல்லுமலா எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதெற்கெல்லாம் தனுஷ் தான் காரணம் : மாளவிகா மோஹனன்

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றுவருகிறது. அப்போது படப்பிடிப்பிற்காக வந்த நடிகர்கள் சாலையிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்தியதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

பீஸ்ட்

மேலும் படப்பிப்பிற்கு வந்தவர்கள் குப்பைகளை ரோட்டிலேயே கொட்டியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம் சாட்டினார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பொதுமக்கள் படப்பிடிப்பிற்கு சென்று கேட்டுள்ளனர்.

அவர்களிடம் பொதுமக்கள் பலமுறை சொல்லியும் படக்குழுவினர் காதில் வாங்கவில்லையாம். இதனால் கடுப்பான மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த நடிகர் டாம் சாக்கோ தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

டாம் சாக்கோ

காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.