திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று முதல் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் கோவிலில் ஏற்கனவே இருந்து வந்த ரூ. 250 சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணமும் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரிசன முறைகளின் மூலம் மூலவரை இருவரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை மாற்றம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதேபோல் கோவில் பாதுகாப்பு படைகள் 125 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் முதல் கட்டமாக இன்று முதல் 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.