திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை! டிடிவி தினகரன் கருத்து.!

திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று   வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ‘பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம்’ என்று கூறி மக்களை ஏமாற்றிய தி.மு.க., அவர்கள் இனி எப்போதுமே சிறையிலிருந்து விடுதலையாக முடியாதபடி அரசாணையும் பிறப்பித்தது. 

தி.மு.க.வின் இந்த துரோகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மருந்து போடுவதாக அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டரில்,

பேரறிவாளன் ஜாமீன் வரவேற்கத்தக்க நிகழ்வு. தாமதப்படுத்தப்பட்டாலும், நீதி கிடைத்திருப்பதில் ஆறுதல் அடைய இடமுண்டு. நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்பதற்கான ஆதாரம் இந்த ஜாமீன் அறிவிப்பு என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.