Uttar Pradesh State Election Result: லக்கிம்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை! | Live Updates

உ.பி-யில் பாஜக முன்னிலை!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

உபி

லக்கிம்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை!

லக்கிம்பூர் கேரி சம்பவம்

விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட லக்கிம்பூர் தொகுதியில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

Uttar Pradesh Election Result 2022: தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் சுற்றுகள் வாரியாக முன்னணி நிலவரம் தெரியவரும்…

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்… முன்னணி நிலவரம்!

உத்தரப்பிரதேச தேர்தல்:

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த மாநிலத்தில் மட்டும் 403 தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒன்பது இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள்

இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க 376 இடங்களிலும், நிசாத் கட்சி 15 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 12 இடங்களிலும் தேர்தலைச் சந்தித்துள்ளது. இந்தக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யாநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்களிலும் தனித்துத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. சமாஜ்வாடி கட்சிக் கூட்டணியில், சமாஜ்வாடி உட்பட மொத்தம் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண்கிறது. இடதுசாரிகள் தொடங்கி, ஆம் ஆத்மி கட்சி வரை பலரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதிக சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி அதிக மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மாநிலம் என்பதால் இந்த மாநிலத் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள்:

உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்த முடிவு விவரங்கள் இன்றே அறிவிக்கப்படும். தேர்தலில் முன்னணியில் இருக்கும் கட்சிகளின் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.