இலங்கைக்கான LNG இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஏற்கனவே திட்டமிட்டபடி, இலங்கைக்கான (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (New fortress Energy) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனல்மின் நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு அருகாமையில் (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் கடந்த வருடம் (2021) செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கெரவலப்பிட்டிய அனல் மின் நிலைய கட்டிடத்தொகுதிக்கு ,நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனம் எரிவாயுவை விநியோகிக்கும் 

இதன்படி, அந்த நிறுவனம் இலங்கைக்கு , 12 இலட்சம் மில்லியன் கலன் (LNG) திரவமாக்கப்பட்ட  எரிவாயுவை நாளாந்தம் வழங்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.