5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி; டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்.!

டெல்லி: டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும், குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.