ஆதாருடன் பான் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

பான் கார்டை ஆதாருடன் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க தவறினால் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில் அளித்தது. அதில், ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு139AA2 பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
image
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.